சீன ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ளும் புதின் மற்றும் கிம்
வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் , அடுத்த வாரம் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் கலந்துகொள்ளும் முதல் சர்வதேச அளவிலான தலைவர்கள் கூட்டம் என்றும் நம்பப்படுகிறது.
நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள 26 நாட்டுத் தலைவர்கள்
இந்த அணிவகுப்பு, சீனாவின் ஜப்பானுக்கு எதிரான போரின் 80 ஆவது ஆண்டு நிறைவையும், இரண்டாம் உலகப் போரின் முடிவையும் குறிக்கும். நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் 26 நாட்டுத் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒருவர்.
சீனா நூற்றுக்கணக்கான விமானங்கள், டாங்கிகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதன் அண்மைய ஆயுதங்களை இதன்போது காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் இராணுவத்தின் புதிய படை அமைப்பு ஒரு அணிவகுப்பில் முழுமையாக காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த அணிவகுப்பில், தியனன்மென் சதுக்கத்தின் வழியாக பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லவுள்ளனர்.
சீனாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பியோங்யாங்கின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான பெய்ஜிங், அதன் அண்டை நாட்டின் பல தசாப்த கால பாரம்பரிய நட்புறவை பாராட்டியது, அத்துடன், இரு நாடுகளும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் கூறியது.
இந்த நிலையில் கிம்மின் வருகை, 2015 இல் நடந்த சீனாவின் கடைசி வெற்றி தின அணிவகுப்பிலிருந்து ஒரு முன்னேற்றமாகும். இந்த அணிவகுப்பின் போது பியோங்யாங் அதன் உயர் அதிகாரிகளில் ஒருவரான சோ ரியோங்-ஹேயை பெய்ஜிங்கிற்கு அனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது