ஒஸ்கார் விருதுபெற்ற hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைது
ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச்சித்திரத்தின் இயக்குநர் hamdan ballal ஐ இஸ்ரேலிய இராணுவத்தினர் கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹம்டான் பலாலின் ( hamdan ballal) வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதைதொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இஸ்ரேலிய இராணுவத்தினர் தாக்கினார்கள்
மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை ( hamdan ballal) 15க்கும் மேற்பட்ட யூதகுடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு தாக்கினார்கள் என யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள், ஹம்டானின் வீட்டிற்கு அருகிலிருந்து நீர்த்தொட்டியை சேதப்படுத்தினார்கள் என்று ம் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஏனைய இராணுவ சீருடை அணிந்த யூதகுடியேற்றவாசிகளுடன் அந்த பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் வந்தனர் அவர்கள் ஹம்டானை அவரது வீட்டிற்குள் துரத்தி பிடித்து படையினரிடம் ஒப்படைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்