கனடாவில் இம்முறை வெள்ளை கிறிஸ்மஸ் சாத்தியமா!
கனடாவில் இந்த ஆண்டு வெள்ளை கிறிஸ்மஸ் (White Christmas) எதிர்பார்க்கும் கனடியர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை சற்று மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளின்படி, தெற்கு ஒன்டாரியோ உள்ளிட்ட சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் நாளில் நிலத்தில் பனி படர வாய்ப்பு குறைவாக உள்ளது.
இந்த முறையில் வானிலை கடவுள்கள் உதவப் போவதில்லை. டொராண்டோவில் வெள்ளை கிறிஸ்துமஸ் கிடைக்க வேண்டுமென்றால் கனவு காண்பதை விட பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை, ஏற்பட்டுள்ளது என கனடிய சுற்றாடல் திணைக்கள ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் கூறினார்.

கடந்த 11 ஆண்டுகளில், டொராண்டோ பகுதிகளில் 8 ஆண்டுகள் ‘பச்சை கிறிஸ்துமஸ்’ (பனி இல்லாத கிறிஸ்துமஸ்) ஆகவே இருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
டொராண்டோ, விண்சர், ஹாமில்டன் போன்ற தெற்கு ஒன்டாரியோ நகரங்களில் பனி மூடிய நிலம் காணப்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, ப்ரைரீஸ் மாகாணங்கள், வடக்கு ஒன்டாரியோ, கிழக்கு ஒன்டாரியோ, மற்றும் தெற்கு கியூபெக் பகுதிகளில் பனிப்பொழிவுடன் கூடிய கிறிஸ்துமஸ் கிடைக்கும் சாத்தியம் அதிகம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“பொதுவாக வெள்ளை கிறிஸ்துமஸ் காணப்படும் பகுதிகளில் இந்த ஆண்டும் அது கிடைக்கும். சில இடங்களில் மட்டும் காத்திருக்க வேண்டியிருக்கும்,” என பிலிப்ஸ் கூறினார்.