கனடாவில் குளத்துச் சேற்றில் சிக்கிய பெண்: தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்பு

Canada
By Kamal Aug 17, 2026 04:56 PM GMT
Report

கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய நிலையில், தீயணைப்புப் படையினரால் மீட்புப் பணிய மேற்கொண்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

சவுத் மார்ச் ஹைலேண்ட்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 'ரெபெக்கா குளத்தில்' 27 வயதுப் பெண் ஒருவர் சேற்றில் சிக்கியிருப்பதாக பிற்பகல் 3 மணியளவில் ஒட்டாவா தீயணைப்புத் துறைக்கு 911 அவசர அழைப்பு வந்தது.

பிளாஸ்டிக் வடிகால் குழாய் மீது நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தனது மகள், நிலைதடுமாறி குளத்தில் விழுந்துவிட்டதாக அவளது தந்தை தீயணைப்புத் துறையினரிடம் தெரிவித்தார்.

கனடாவில் குளத்துச் சேற்றில் சிக்கிய பெண்: தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்பு | Ottawa Firefighters Rescue Woman Trapped

சேற்றில் இடுப்பளவு மூழ்கிய அந்தப் பெண், நகர முயன்ற ஒவ்வொரு முறையும் மேலும் ஆழமாகச் மூழ்கத் தொடங்கினார்.

அவசர அழைப்பு விடுத்த தந்தையின் கைபேசி ஜி.பி.எஸ் (GPS) தகவலைப் பயன்படுத்தி, தீயணைப்புப் படையினர் அப்பெண் இருக்கும் இடத்தை விரைவாகக் கண்டறிந்தனர்.

வனப்பகுதியின் நுழைவாயிலில் தந்தையைச் சந்தித்த வீரர்கள், அவரோடு சென்று அப்பெண் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

அப்பெண்ணின் இடது கால் இடுப்பு வரை சேற்றில் பலமாகச் சிக்கியிருந்ததை உறுதிசெய்த தீயணைப்பு வீரர்கள், 'பைக் போல்' என்ற கருவியைப் பயன்படுத்தி அவரைச் சீராகப் பிடித்துக்கொண்டு, காலைச் சுற்றியிருந்த சேற்றைக் கவனமாகத் தோண்டி எடுத்து அவரை வெளியே மீட்டனர்.

அவசர அழைப்பு வந்த 15 நிமிடங்களுக்குள் அந்தப் பெண் சேற்றிலிருந்து மீட்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.  

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US