விடுமுறைக்காக வெளிநாடு சென்ற தம்பதி சடலங்களாக மீட்பு
கனடாவின் கடினோ (Gatineau), குவெபெக் நகரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், இந்த விடுமுறை காலத்தில் ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளது.
டொமினிக்கன் குடியரசில் விடுமுறைக்காக தங்கியிருந்த தம்பதியர் இருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அலேன் நோயல் (Alain Noël) மற்றும் கிரிஸ்டின் சாவே (Christine Sauvé) ஆகியோரின் உடல்கள், பாக்ஸிங் டே (Boxing Day) அன்று, அவர்களது விடுமுறை இல்லத்திற்குள் அவர்களின் மகனால் கண்டுபிடிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடற்கூறு பரிசோதனை (Autopsy) முடிவுகள் 45 நாட்களுக்குள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விடுமுறை காலம் என்பதும் மிகவும் கடினமாக உள்ளது எனவும் தூதரகங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் எதையும் விரைவாக செய்ய முடியவில்லை,” எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
டொமினிக்கன் குடியரசில் மரணச் சான்றிதழ் கிடைக்கும் வரை, கியுபெக்கிலும் எந்த நடைமுறைகளையும் தொடங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.