ஈரானின் நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது
ஈரான் அரசிற்கு எதிராக போராடிய குடிமக்களை கொன்றதும் கைது செய்ததையும் கனடா கடுமையாக கண்டித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக “அதிகப்படியான மற்றும் உயிர்ப்பறிக்கும் வன்முறையை” பயன்படுத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அனிதா ஆனந்த், வலியுறுத்தினார்.
தங்களின் மரியாதைக்கும், அமைதியான போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமைக்கும் ஈரான் மக்கள் துணிச்சலுடன் குரல் கொடுத்து வருவதைக் கௌரவிக்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “போராட்டக்காரர்கள் கொல்லப்படுதல், வன்முறை பயன்பாடு, கைது நடவடிக்கைகள், மிரட்டல் உத்திகள் ஆகியவற்றை ஈரான் அரசு தன் சொந்த மக்கள்மீது மேற்கொள்வதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஈரான் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், செயற்பாட்டாளர்கள் கூறுகையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இதைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.