ஓட்டாவாவில் பெண் கொலை ; 24 வயது இளைஞர் மீது கொலைக்குற்றச்சாட்டு
கனடாவின் ஒட்டாவா லோட்டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 24 வயது இளைஞர் மீது கொலைக்குற்றம் (Second-degree murder) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டாவா போலீசார் இதை பெண்கொலை என அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் மாலை 4:38 மணியளவில் 20 ஹேனி தெரு (Heney St.) முகவரியில், MacDonald Gardens Park அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்தி குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 51 வயது ரெனீ டெஸ்காரி (Renée Descary) என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டதாக 24 வயது ஒலிவர் டெனியா (Oliver Denia) என சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.