டிரம்ப் வரி விதிப்பு உலகில் வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளா நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி (Giorgia Meloni),
60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி
“அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் பொருளாதார போர் என்பது மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி விடும் என கூறியுள்ளார்.
அதேவேளை அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு தகுந்த பதில் நடவடிக்கை கொடுப்போம். எதிர்த்து நிற்போம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார்.
உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.