ஒட்டாவாவில் ட்ரக் வண்டி போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கைது!
ஒட்டாவாவில் ட்ரக் வண்டி போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தவர் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நடாத்தும் இடத்தை விட்டு வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த பிரதான ஏற்பாட்டாளர்களான Chris Barber மற்றும் Tamara Lich ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எவ்வாறெனினும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான குளிர் மற்றும் பனியை பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இசையை ஒலித்து ஆடி வருகின்றனர்.