பாகிஸ்தான் குழந்தைகள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!
பாகிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் 2,200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நடப்பு 2022-ம் ஆண்டிற்கான வருடாந்திர உலக அறிக்கையின்படி, சர்வதேச மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு தரவரிசையில் மொத்தம் கணக்கிலுள்ள 170 நாடுகளில் பாகிஸ்தான் 167-வது இடம் வகிக்கிறது என மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், அரசு சாரா அமைப்பின் அறிக்கை ஒன்றின்படி, கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தானில் 2,200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளனர் என சுட்டி காட்டியுள்ளது.
இதுபற்றி அந்நாட்டில் இருந்து வெளிவரும் சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவர், சிறுமிகள் மீது நடத்தப்படும் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 2,211 ஆக உள்ளது.
இது அந்நாட்டில் மனித உரிமைகளின் இருண்ட சூழ்நிலையை எடுத்து காட்டியுள்ளது. இதற்காக 79 செய்தி நிறுனங்களில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் பல வழக்குகள் பலாத்காரம், துஷ்பிரயோகத்திற்காக கடத்தப்படுதல் நடக்கின்றன என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் சிறுவர்கள் 1,004 எண்ணிக்கையிலும், சிறுமிகள் 1,207 எண்ணிக்கையிலும் உள்ளனர்.
803 சிறுவர் சிறுமிகள் கடத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்களில் 298 பேர் சிறுவர்கள். 243 பேர் சிறுமிகள். கடத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
மேலும் நகர பகுதிகளில் 52 சதவீத வழக்குகளும், கிராமப்புற பகுதிகளில் 48 சதவீத வழக்குகளும் பதிவாகின்றன.