இந்திய விமானங்களுக்கு வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்!
இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இந்தியாவிலிருந்து இயங்கும் அனைத்து விமானங்களிற்கும் தனது வான் எல்லையை மூடுவதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் அல்லது மூன்றாவது நாட்டிலிருந்து பாக்கிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு செல்லும் பொருட்கள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும் பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது.
பாக்கிஸ்தானிற்கு என ஒதுக்கப்பட்ட நீரோட்டத்தை தடை செய்யவோ அல்லது திருப்பிவிடவோ மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் போர்நடவடிக்கையாக கருதப்போவதாக பாக்கிஸ்தான் எச்சரித்துள்ளது.