வெளிநாடொன்றில் பொது தேர்தல் வேட்பாளர் கொடூரமாக சுட்டுக்கொலை!
பாகிஸ்தான் நாட்டில் எதிர்வரும் பெப்ரவரி 8-ம் திகதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் தனித்து போட்டியும் ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இவருக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது. மேலும் அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டனர்.
இதில், ஜெப் கான் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய உதவியாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊழல் வழக்கு ஒன்றில், இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி பூஷ்ரா ஆகியோருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எல்லை பகுதியின் இருபுறத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளனர்.
இருப்பினும், தாக்குதலை நடத்தியது யார் என்று தெரிய வரவில்லை.