பாரிய நெருக்கடி: அமெரிக்காவில் உள்ள தூதரக கட்டிடத்தை விற்க முயற்சிக்கும் பிரபல நாடு!
அமெரிக்காவில், அமைத்துள்ள பாகிஸ்தான் தூதரகம் புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், நகரைன் மைய பகுதியில், அந்நாட்டின் பழைய தூதரக கட்டிடம் அமைந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள தனது தூதரக சொத்து ஒன்றை விற்க பாகிஸ்தான் விரும்புகிறது.
1950 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவை இந்த பழைய கட்டிடத்தில் இயங்கி வந்ததாகவும், இந்த கட்டிடம் சந்தை பகுதியில் இருப்பதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தி டானிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதிகாரி கூறுகையில்,
'விற்பனைக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். தூதரகம் முன்மொழியப்பட்ட விற்பனையை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து பல ஏலங்களைப் பெற்றுள்ளது.
அவர்களுக்கு எது சிறந்தது என்பதை மதிப்பிடுவதற்கு மதிப்பீட்டாளரையும் கலந்தாலோசித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது என கூறினார்.
பாகிஸ்தான் தூதரக அதிகாரி, 'நாங்கள் அவசரப்படவில்லை, பாகிஸ்தான் பாதிக்கப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் நாங்கள் செய்ய மாட்டோம்' என்றார்.
தற்போதைய மற்றும் பழைய தூதரகத்திற்கு சொந்தமான இரண்டு கட்டிடங்கள் சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது.
ஆனால் இந்த கட்டிடங்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை என்று தூதரகம் கூறுகிறது. தற்போதைய தூதரகம் புதிய கட்டிடத்தில் உள்ளது.
இது 2000 களின் முற்பகுதியில் கட்டப்பட்டது. அதே நேரத்தில் பழைய தூதரக கட்டிடம் மாசசூசெட்ஸ் அவென்யூவில் நகரின் மையத்தில், இந்திய தூதரகத்திற்கு அருகில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.