பாகிஸ்தான் தலைமை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து பயங்காரவாதிகள் தாக்குதல்!
பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் உள்ள பொலிஸ் வளாகம் மீது பயங்காரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல பொலிஸ் கட்டிடங்கள் மற்றும் அதிகாரி குடியிருப்புகள் உள்ள வளாகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி தலைமை பொலிஸ் நிலையத்திற்குள் நேற்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் 8 பயங்கரவாதிகள் புகுந்த கைக்குண்டுகளை வீசியதாக உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா கான் தெரிவித்துள்ளார்.
சிந்து மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் ஷர்ஜீல் மேமன் கூறுகையில்,
தாக்குதல் நடத்தியவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், இருப்பினும் சண்டை இன்னும் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் அதிகாரிகள் தெரிவித்தனர்.