இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!

pakistan Prime Minister Imran Khan Protesters Vote Against Resolution of no confidence
By Shankar Mar 20, 2022 09:54 AM GMT
Shankar

Shankar

Report

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னிட்டு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது, அவர்கள் அனைவரும் இஸ்லாமாபாத்தில் இருக்கும் சிந்து மாளிகையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, (18-03-2022) அவர்களுக்கு எதிராக ஆளும்கட்சி தொண்டர்கள் சிந்து மாளிகையின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திடீரென ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மாளிகையின் உள்ளே புகுந்து தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை தாக்க தொடங்கினர். இது பெரும் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையை கண்டித்து, இஸ்லாமாபாத்தில் உள்ள சிந்து மாளிகையைத் தாக்கிய இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சிக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சிந்து மாளிகையில் கடுமையான வன்முறை மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை இஸ்லாமாபாத் பொலிஸார் கண்டுகொள்ளாமல் அமைதி காத்தனர். ஆனால் சிந்து மாகாண போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

சிந்து மாகாண தகவல் மற்றும் தொழிலாளர் மந்திரி சயீத் கானி கூறுகையில்,

“தற்போதைய மத்திய அமைச்சர்கள் வெளிப்படையாக மிரட்டல்களை விடுத்து நாட்டில் வன்முறையை ஏற்படுத்த சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆளும்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுபெறப்போகும் நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு அவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியை பயமுறுத்துவதற்காக நடத்தப்பட்ட கோழைத்தனமான செயல் இது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இஸ்லாமாபாத் காவல்நிலையத்துக்கு சென்று இம்ரான் கானின் நெருங்கிய பிரமுகர் விடுதலை செய்து வெளியே அழைத்து சென்றுள்ளார்.

வன்முறை சம்பவத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படும் எப்ஐஆரில், இம்ரான் கான் மற்றும் உள்துறை மந்திரியின் பெயர்கள் சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US