பகிரங்கமாக போரை அறிவித்த பாகிஸ்தான் ; அதிகரிக்கும் போர் பதற்றம்
சமீபகாலமாக, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் மீது ஆப்கானிஸ்தான் படை தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாகவும், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் தலிபான் அரசு தெரிவித்தது.

இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு மீது போர் தொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார்.
தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது என்றும், இப்போது தங்களுக்கு இடையே நடப்பது நேரடி போர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் காபூல், கந்தகார் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இருநாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. போரை நிறுத்துமாறு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கேட்டுக்கொண்டுள்ளது.
காபூலில் பாகிஸ்தான் ராணுவம் மூன்று இடங்களில் தாக்குதல் நடந்ததை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஆப்கன் தலைநகரில் இந்தத் தாக்குதல்கள் எங்கு நடந்தன அல்லது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போதுவைர வெளியாகவில்லை.
கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தாலிபான் அரசு செய்தித் மறுபுறம் பாகிஸ்தான் தரப்பும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் தாக்குதலில் தங்கள் ராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதையும் நிராகரித்தது.