பிறந்து சில தினங்களே ஆன குழந்தையை சுட்டுகொன்ற தந்தை! வெளியான பகீர் தகவல்
பாகிஸ்தானில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளார்.
இந்த சம்பவம் மத்திய பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி நகரில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் அதே நகரை சேர்ந்த ஷஜாப் கான் எனவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, இவருக்கு கடந்த சிலதினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்காவதாக தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார்.
ஆனால் மறுபடியும் பெண் குழந்தை பிறந்ததால், ஷஜாப் கான் மிகவும் கோபத்துடன் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஷஜாப் கான், வைத்திருந்த துப்பாக்கியால் பிறந்த குழந்தை என்றும் பாராமால் 5 முறை சுட்டுக் கொன்றுள்ளார்.
இதையடுத்து தலைமறைவான அவரை பொலிஸார் கடந்த நான்கு நாட்களாக வலைவீசி தேடிவந்தனர். தீவிர தேடுதலை அடுத்து ஷஜாப் கானை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.