வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு!
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு (Imran Khan) எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது.
சீனாவிடமிருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.