கிறிஸ்தவ ஆலய மத கூட்டத்திற்கு சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்! 6 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள மாகாணம் ஒன்றில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் பஞ்சாப் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் பேருந்து ஒன்று கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கு மதம் சார்ந்த கூட்டத்திற்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.