கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்; பாழான சீனாவின் கனவுத் திட்டம்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான உலகளாவிய பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு வழங்குவதாகக் கூறிய 60 பில்லியன் அமெரிக்க டாலர் உறுதிப்பாட்டிலிருந்து சீனா பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா-பாகிஸ்தான் பொருளாதாரக் காரிடாரின் (சிபிஇசி) எதிர்காலம் சீனாவின் வெளிப்படையான புதிய, பழமைவாத கடன் கொள்கையால் மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் அதிகப்படியான வளர்ச்சியையும் கொண்டுள்ளது. இது பாகிஸ்தானை ஒரு கடன் நெருக்கடியை நோக்கி வேகமாக செலுத்துகிறது.
பாகிஸ்தானின் கடன் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 107% ஆக உள்ளது. சீர்திருத்தங்களைக் கொண்டுவர பாகிஸ்தான் அரசாங்கம் தவறியதாலும், நிதி நிர்வாகத்தை பலவீனப்படுத்தியதாலும் பாகிஸ்தான் கடன் வலையில் சிக்கியுள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த தரவை மேற்கோள் காட்டி சமீபத்திய ஊடக அறிக்கைகள், அரசாங்க ஆதரவுடைய சீன மேம்பாட்டு வங்கி மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகியவை பாகிஸ்தானுக்கு வழங்கிய மொத்த கடன் 2016’ல் 75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெறும் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இதுவே தற்போது 2020’ஆம் ஆண்டில் இந்த தொகை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சுருங்கிவிட்டதாக தற்காலிக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிபிஇசி திட்டத்திற்கான சீனாவின் நிதி குறைந்து போவதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தகப் போரும், சிபிஇசியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களின் ஊழலும் தான் எனக் கூறப்படுகிறது.
பி.ஆர்.ஐ தொடர்பான பல திட்டங்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன அல்லது நிதி பற்றாக்குறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட 122 சிபிஇசி திட்டங்களில், இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 32 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் சிபிஇசி கடமைகளின்படி, பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை கட்ட வேண்டும். எனினும் குவாதர் மண்டலம், பஞ்சாபில் உள்ள அல்லாமா இக்பால் தொழில்துறை நகரம் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ரஷாகாய் பொருளாதார மண்டலம் ஆகியவற்றைத் தவிர்த்து, மற்ற ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பணிகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது எனக் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் சீனரல்லாத நிறுவனங்களை இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்ய அழைக்க சீனா தயக்கம் காட்டுவதாககே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நிதித் தட்டுப்பாட்டால் இவற்றைக் ஒட்டுமொத்தமாக கிடப்பில் போட சீனா திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.