கனரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றும் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய பாதுகாப்புப் படை உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் தரப்பு கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து சுமார் 300 முதல் 400 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அனைத்தையும் இந்திய பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மூலம் பல தகவல்களைத் திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.