பலஸ்தீனாவை தனி நாடாக ஏற்க முடியாது ; நெதன்யாகு கடும் எச்சரிக்கை
பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பலஸ்தீனத்தின் காஸாவில் போரை நிறுத்தும்படி ட்ரம்ப் வலியுறுத்தினார்.
இதேவேளை போர் நிறுத்தம் குறித்து நெதன்யாகு கூறுகையில்,
பெரிய சலுகைகள் எதுவும் காட்டப்படாது.
ஹமாஸ் மற்றும் பலஸ்தீன அரசுகள் தீவிரவாதிகளுக்கான பதுங்கு குழிகளைக் கட்டி, எங்கள் நாட்டிற்குள் அவர்களை அனுப்பி படுகொலைகளையும், பலாத்காரத்தையும் அரங்கேற்றினர். ''காஸா எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்க முடியாது,'' என்றார்.