கேள்விக்குறியாகும் பலஸ்தீன் மாணவர்களின் கல்வி
கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பாடசாலைகளை இஸ்ரேல் நிரந்தரமாக மூடியதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன அகதிகளுக்காக ஆறு பாடசாலைகளை நடத்தி வருகிறது.
இதேபோல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையிலும் இதுபோன்ற பாடசாலைகளை ஐநா நடத்தி வருகின்றது.
நடப்பாண்டு தொடக்கத்தில் இஸ்ரேலில் ஐநா பாடசாலைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது.
இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஆறு ஐநா பள்ளிகளை 30 நாள்களுக்குள் மூடும்படி கடந்த மாதம் இஸ்ரேல் கல்வித்துறை மற்றும் காவல்துறை உத்தரவிட்டிருந்தது.
இதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் (மே 7) முடிவடைந்ததையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பாடசாலைகள் நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது.
இதனால் 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.