பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் உலக வாங்கி ; இந்தியா சினம்!
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி , பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க உலக வாங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஷ்மீரின் பஹல்காம் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை சுட்டுகொல்லப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு
இதனால் பாகிஸ்தான் மோசமான சேதத்தை சந்தித்துள்ளமையினால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் தொகையை கோர பாகிஸ்தான் ஆலோசித்த நிலையில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா அணுகியுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்குதான் பயன்படுத்தும் எனவும் இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இதேவேளை, உலக வாங்கி விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்ய சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது