”காசா விற்பனைக்கு அல்ல”டிரம்ப்பின் மைதானத்திற்குள் புகுந்து எச்சரித்த பாலஸ்தீனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் நாங்கள் காசாவை கைப்பற்றி அதனை மத்திய கிழக்கின் சுற்றுலா தளமாக மாற்றுவோம் என்றும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்காட்லாந்து நாட்டில் டிரம்ப்க்கு சொந்தமான கோல்ப் மைதானத்திற்குள் பாலஸ்தீன குழுவினர் சிலர் புகுந்து, அங்குள்ள புல்வெளி பகுதியில் 'காசா விற்பனைக்கு இல்லை' என்று பிரமாண்டமாக எழுதி வைத்துள்ளனர்.
மேலும், கோல்ப் மைதானம் முழுவதும் குழிகள் தோண்டப்பட்டு, டிரம்ப் காசாவை தனது சொத்தாக கருத முயற்சித்தால், அவரது சொந்த சொத்து தங்களால் சூறையாடப்படும் என பாலஸ்தீன குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஸ்காட்லாந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.