காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற திட்டமிடுமாறு இராணுவத்திற்குப் பணிப்பு
அமெரிக்கா காசாவின் பிரதேசத்தைக் கைப்பற்றி அங்குள்ள 2.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு இணங்க, காசாவில் இருந்து வெளியேற விரும்பும் எந்தவொரு குடியிருப்பாளரையும் அவ்வாறு செய்ய அனுமதிக்கும் திட்டத்தைத் தயாரிக்குமாறு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தனது இராணுவத்திடம் கூறியுள்ளார்.
காசா மக்களுக்கு நடமாடும் மற்றும் இடம்பெயர்வு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், ஹமாஸுடனான இஸ்ரேலின் போரை விமர்சிக்கும் நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டவை என்றும் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.
இதற்கிடையில், காசா மறுசீரமைப்பின் போது மீள்குடியேற்றம் தற்காலிகமாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வலியுறுத்தினார்.
இருப்பினும் டிரம்ப் அது நிரந்தரமாக இருக்கும் என்று கூறியிருந்தார். பாலஸ்தீனத் தலைவர்களும் அரபு நாடுகளும் இந்தத் திட்டத்தை நிராகரித்து.
கட்டாயமாக இடம்பெயர்வது சர்வதேச சட்டத்தை மீறும் என்று கூறியுள்ளன.