பனாமா கால்வாயை விட்டுக்கொடுக்கப்போவதில்லை; டிரம் அறைகூவல்
பனாமாகால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரியதாக ஏதாவது நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.
பனாமா கால்வாயில் சீனாவின் பிரசன்னத்தினால் அமெரிக்காவிற்கும் பனாமாவிற்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துவருகின்ற சூழ்நிலையிலேயே டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் கையளிக்கப்படாத பனாமா கால்வாயை சீனா நிர்வகிக்கின்றது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாய் முட்டாள்தனமாக பனாமாவிடம் கையளிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பனாமா இது குறித்த உடன்படிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்த டிரம்ப், நாங்கள் பனாமா கால்வாயை மீளபெறப்போகின்றோம் அல்லது பெரிதாக ஏதாவது நடக்கப்போகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.