ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம் , பொறுப்பாசிரியர் இராஜினாமா
பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார்.

தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது. அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் ஜனவரி 2021இல் நடந்த கெப்பிடல் ஹில் கலவரத்தை ஊக்குவிப்பதைப் போல காணொளி தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த இராஜினாமாக்கள் பிபிசியில் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு, மேலும், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.