ஹிஜாப் அணியாததால் 27 வயதான இளம் பாடகிக்கு நேர்ந்த நிலை!
ஈரானில் இசை நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாததால் 27 வயதான பாடகி க்யை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஈரான் பாடகியான பரஸ்டூ அஹமதி ஆன் லைனில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
குறித்த இசை நிகழ்ச்சியில் அவர் நீண்ட கருப்பு ஸ்லீவ்லெஸ் மற்றும் காலர் இல்லாத ஆடையை அணிந்திருந்தார். அவருடன் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
முன்னதாக அந்த காணொளியில், அவர் எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. எனினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் வடக்கு மாகாணமான மஸந்தரானின் தலை நகர்சாரி சிட்டியில் வைத்து பாடகி பரஸ்டூ அஹமதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.