பாரிஸ் நகர மக்களை குலைநடுங்க வைத்தவரின் பெயர், புகைப்படம் வெளியானது
பாரிஸ் நகரில் குர்து இன மக்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் ரயில் சாரதியான வில்லியம் மாலெட் என்பவரே அந்த தாக்குதல்தாரி என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகரை மொத்தமாக உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் கொல்லப்பட்டனர்.
மூவர் காயங்களுடன் தப்பிய நிலையில், அதில் ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, துப்பாக்கிதாரியிடம் இருந்து ஆயுதத்தை பறித்துள்ளார். 2013ல் மூன்று குர்து இன மக்கள் கொல்லப்பட்டு, இதுவரை துப்புத்துலங்காத வழக்கை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது பாரிஸ் நகர தாக்குதல் சம்பவம்.
69 வயதான வில்லியம் மாலெட் அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கியால் தாக்குதலை முன்னெடுத்துள்ளார். குடியேறிகள் தொடர்பில் கடுமையான வெறுப்பு கொண்டவர் வில்லியம் மாலெட் என கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் குடியேறிகளையும் வெளிநாட்டவர்களையும் கொலை செய்ய முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.