யாப்பு விதிகளை மீறிய அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு தடை
யாப்பு விதிகளை மீறியதன் அடிப்படையில் அமெரிக்க கிரிக்கெட் சபையை, உறுப்பினர் நிலையில் இருந்து இடைநீக்கியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அரசியலமைப்பின் கீழ் ஐசிசி உறுப்பினராக தனது கடமைகளை அமெரிக்க கிரிக்கெட் சபை மீண்டும் மீண்டும் மற்றும் தொடர்ந்து மீறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை செவ்வாய்க்கிழமை (23) கூட்டத்திற்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவெளை அமெரிக்க கிரிக்கெட் சபையின் இடைநீக்கமானது பெப்ரவரியில் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் ரி20 உலகக் கிண்ணத்தையோ அல்லது 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தேசிய அணி பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் நடந்த ஐசிசி ஆண்டு பொதுக் கூட்டத்தில், அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை" நடத்தவும் "விரிவான" நிர்வாக சீர்திருத்தங்களை செயல்படுத்தவும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.