திடீரென நுழைந்த இராணுவ மோட்டார் சைக்கிள் குழுவினரை துரத்திய மக்கள்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் இன்று காலை (05-04-2022) நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பல பகுதிகளில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதன்போது இராணுவ உடையில் ஆயுதம் ஏந்திய 6 பேர் மோட்டார் சைக்கிளில் வருதை தந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த மூன்று மோட்டார் சைக்கிள்களும் நாடாளுமன்றத்தை நோக்கி வந்ததாகவும், வாகனங்களில் பதிவு எண் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களை விசாரித்து மோட்டார் சைக்கிள்களின் சாவியை அகற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.