நோர்வேயின் விதியை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தல்; ஆட்சியில் அமரப்போவது யார்?
நோர்வேயின் விதியை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (7) துவங்கியுள்ளது. இந்தத் தேர்தல் அந்நாட்டின் அரசியல் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் எர்னா சோல்பெர்க் தலைமையிலான பழமைவாத கட்சிக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையாக உள்ளது.
ஆட்சியில் அமரப்போவது யார்?
வாழ்க்கைச் செலவு, வரிவிதிப்பு, பொது சேவைகள் மற்றும் எரிசக்தி கொள்கைகள் போன்ற முக்கிய விவகாரங்கள் இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, இடதுசாரி கூட்டணி 88 இடங்களையும், வலதுசாரி கூட்டணி 81 இடங்களையும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பெரும்பான்மைக்கான குறைந்தபட்ச வித்தியாசமாகும். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்கும் இங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேவேளை இன்று மாலைக்குள் வாக்குப் பதிவு நிறைவடையும் நிலையில் நோர்வே தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது