கனடாவில் பல்கலை மாணவர்களுக்கு சிறந்த பகுதி நேர தொழில்கள் எவை?
கனடாவில் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் எவ்வாறான பகுதி நேரத் தொழில்களில் ஈடுபட முடியும் என்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2021-2022ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களின் சராசரி வகுப்புக் கட்டணங்கள் 6693 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கோடை காலத்தில் அநேகமான கனேடிய மாணவர்கள் பகுதி நேர தொழில்களில் ஈடுபடுபதற்கு போதியளவு கால அவகாசம் காணப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டக்கூடிய சில தொழில்கள் பற்றிய விபரங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பார்தண்டர் அல்லது சேர்வர் (Bartender or server)
கனடாவின் ஓரளவு பெரிய நகரப் பகுதிகளில் வாழ்ந்து வந்தால் ரெஸ்டுரன்ட்களில் பார்தண்டர் மற்றும் சேர்வர் தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மணித்தியாலம் ஒன்றுக்கு 15 டொலர்கள் என்ற அடிப்படையில் சம்பாதிக்க முடியும் எனவும், இடத்திற்கு இடம் இது வேறுபடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்லைன் ப்ரீலான்ஸ் சேர்விஸ் (Online freelance services)
இணைய வழியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்துக்கொள்ள முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ஒன்லைன் புருப்ரீடிங் ப்ரீலான்ஸ் புளொக் ரைட்டர் கிரபிக் டிசைனர் விடீயோ எடிடிங் சோசல் மீடியா மார்கடிங் போன்ற பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் வருமானம் ஈட்டிக் கொள்ள முடியும்.
ரைட்ஷெயார் டிரைவர் (Rideshare driver)
உங்களிடம் புதிய வாகனம் (2014 அல்லது அதன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்டவை) இருந்தால் மணிக்கு 23 டொலர்கள் சம்பாதிக்க முடியும். ஊபர், லிப்ட் போன்ற நிறுவனங்களின் ஊடாகவும் வாகனங்களை பதிவு செய்து கொண்டு பகுதி நேர பணிகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
உணவு விநியோகம் (Food delivery)
ஊபர் ஈட்ஸ், டோர்டேஷ் அல்லது ஸ்கிப்தடிஷஸ் போன்ற நிறுவனங்களில் இணைந்து கொண்டு உணவு விநியோகம் செய்வதன் மூலம் பகுதிநேர தொழில்களில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 25 டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
வெர்ச்சுவல் செகரடரி(Virtual secretary)
கடந்த 2020ம் ஆண்டு ஜுலை முதல் 2021 ஜுன் மாதம் வரையிலான காலப் பகுதியில் 29 வீதமானவர்கள் இணைய வழியில் சேவைகளை வழங்கியுள்ளனர். கடந்த காலங்களை விட தற்பொழுத ஆன்லைனில் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. சட்டத்துறை, மருத்துவம், கணக்கியல், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொருட்களை இடம் நகர்த்தல் ( Work with a moving company)
புதிதாக வீடு மாறுதல், காரியாலயங்கள் மாறுதல் போன்ற சந்தர்ப்பங்களில் பொருட்களை இடம் நகர்த்தும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏனைய தொழில்களை விடவும் இதற்கு கூடுதல் உடல் உழைப்பினை வழங்க வேண்டியுள்ளது. மணித்தியாலம் ஒன்றுக்கு 18 முதல் 20 டொலர்கள் வரையில் இந்த தொழில் ஊடாக பணம் சம்பாதிக்க முடியும்.
இவ்வாறான பல்வேறு பகுதி நேர தொழில்களின் மூலம் பணம் சம்பாதித்துக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.