வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து
வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைரேனியா கடற்கரை நகரிலிருந்து புறப்பட்ட குறித்த படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை மற்றும் கடும் அலைகள் காரணமாக படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் துருக்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் படகின் தளபதியும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.