ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் அதிரடி தீர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஐஸ்லாந்து நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர்.
இதன்படி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 52.8 சதவீத மக்கள் "இல்லை" என்றும் 47.2 சதவீத மக்கள் "ஆம்" என்றும் வாக்களித்துள்ளனர்.

இந்தநிலையில் பொதுமக்களின் இந்த முடிவை மதிப்பதாக ஐஸ்லாந்து பிரதமர் கிரிஸ்ட்ருன் ஃப்ரொஸ்டாடோட்டீர் (Kristrun Frostadottir) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது பதவிக்காலம் 2028 இல் முடியும் வரை ஐரோப்பிய ஒன்றிய விவகாரம் மீண்டும் அரசியல் திட்டத்துக்குள் வராது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால் நாட்டின் இறையாண்மை மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்று பொது வாக்கெடுப்பில் "இல்லை" என்று வாக்களித்தவர்கள் தெரிவித்து வந்தனர்.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால், நாடு சிறப்பான இடத்துக்கு செல்லும் என்று ஆம் என்று வாக்களித்தவர்கள் தெரிவித்து வந்தனர்.