சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல் ; 7 பேர் பலி
வட சைப்ரஸ் அருகே சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள், தலைகீழாக கவிழ்ந்த கப்பலின் அடிப்பகுதியில் பற்றிக் கொண்டு தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் கெரினியா துறைமுகத்திலிருந்து பிற்பகல் 12:30 க்கு (0930 GMT) புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ன காரணம் என்று தெரியாத நிலையில் அது தண்ணீரை உள்வாங்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் உள்ள தாசுசு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.