விமான பயணி ஒருவரின் மடிக்கணினியில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு!
அமெரிக்காவில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் பயணி ஒருவரின் மடிக்கணினியில் (லேப்டாப்) தீப்பற்றியதையடுத்து, அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.
நியூயாா்க்கில் உள்ள ஜெஎஃப்கே சா்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெட்ப்ளூ நிறுவனத்தைச் சோ்ந்த பயணிகள் விமானம் சனிக்கிழமை புறப்படத் தயாராக இருந்தது.
இதன்போது பயணி ஒருவரின் மடிக்கணினியில் உள்ள லித்தியம் பேட்டரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மீட்புப் படையினா் விரைந்து வந்து மடிக்கணினியில் பற்றிய தீயை அணைத்தனா்.
விமானத்தில் இருந்த 127 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் சம்பவத்தில் 7 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.