சூடானில் முழுவதும் இந்திய பெண் வீரர்களை கொண்ட அமைதிப்படை!
ஐ.நா. அமைதிப்படையில் உலகின் பெரும்பாலான நாட்டின் ஆண், பெண் வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களுடைய முக்கியமான வேலை, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் மக்களுக்கு உதவி புரிவதாகும்.
இந்தியா ஐ.நா. அமைதிப்படைக்கு ஏராளமான வீரர்களை அனுப்பியுள்ளது. பெண் வீரர்கள் ஐ.நா. பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சூ
டானில் உள்ள அபெய்க்கு ஐ.நா. பணிக்காக ஒரு படைப்பிரிவு செல்கிறது. இது முழுவதும் பெண் வீரர்கள் கொண்ட படைப்பிரிவு ஆகும். இதில் இடம் பிடித்துள்ள அனைவரும் இந்திய பெண் வீரர்கள் ஆவார்கள்.
இதன் மூலம் 2007-க்குப் பிறகு ஒரு படைப்பிரிவாக மிகப்பெரிய அளவில் பணியில் ஈடுபடும் பெருமையை இந்திய பெண் வீரர்கள் பெறுகின்றனர்.
இதற்கு முன் 2007-ல் லைபீரியாவில் அமைதிப்படை பிரிவில் அனைவரும் பெண் வீரர்களாக இடம் பிடித்திருந்தனர்.
இந்திய பெண் படைப்பிரிவு இன்றில் இருந்து அபேயிலா், ஐ.நா.வின் இடைக்கால பாதுகாப்பு படையில் ஒரு குழுவாக செயல்பட இருக்கிறார்கள்.
சூடானில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மனிதாபிமான செயல்களுக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த குழு பணியில் ஈடுபட இருக்கிறது.