ரொறான்ரோவில் இடம்பெற்ற பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த பாதசாரி!
ரொறன்ரோவில் இடம் பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரொறன்ரோ வடமேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் மோதுண்ட குறித்த பாதசாரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவின் வெஸ்டன் மற்றும் ரொஜர்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்திருந்த பாதசாரியை மீட்டு முதலுதவிகள் வழங்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் காயமடைந்த நபருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
என்ன காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் டிரக் வண்டியின் சாரதியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.