மாண்ட்ரியாலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் மாண்ட்ரியல் நகரின் தெற்கு எல்லைப் பகுதியில் காணப்படும் லோங்கயிலில், இரவு ஒருவர் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்தார்.
132ம் இலக்க வீதியின் மேற்கு வழியில் ஒரு ஆணும் ஒரு வாகனமும் இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக அவசர உதவித் துறைகள் அழைக்கப்பட்டாபக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஆணின் வயதும், அடையாளமும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
அவர் சாலையில் இருந்தபோது வேகமாக வந்த வாகனம் மோதியதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதிய வாகனத்தை ஓட்டியவர் 20 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும் அவர் அதிர்ச்சி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்த மாகாணக் காவல்துறையின் விபத்து ஆய்வாளர் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.