ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களை அடையாளப்படுத்திய பென்டகன்
யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் குவைத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது அமெரிக்க வீரர்களின் அடையாளத்தை பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, ஐந்தாவது வீரராக அயோவாவின் வோகியைச் சேர்ந்த மேஜர் ஜெப்ரி ஓ'பிரையன் (Major Jeffrey O'Brien) அடையாளம் காணப்பட்டுள்ளார். மேஜர் ஜெப்ரி ஓ'பிரையன் , 2012 ஆம் ஆண்டு சிக்னல் கோர்ப்ஸ் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்துள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு குவைத்தில் பணியில் அமர்த்தப்பட்டதாக பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குவைத் தாக்குதலில் உயிரிழந்த ஆறாவது வீரர் கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவைச் சேர்ந்த பிரதம வாரண்ட் அதிகாரியான 54 வயதுடைய ரொபர்ட் எம். மர்சான் (Robert M. Marzan) எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) குவைத்தின் 'போர்ட் ஷுஐபா' பகுதியில் அமைந்துள்ள கட்டளை மையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறித்த ஆறு வீரர்களும் உயிரிழந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.