அரசாங்கத்திடமிருந்து பணம் பெறும் கனேடிய மக்கள்
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்ள உள்ளனர்.
மில்லியன் கணக்கான ஒன்றாரியோ பிரஜைகளுக்கு அரசாங்கம் ஒரு தொகை கொடுப்பனவினை வழங்குகின்றது. காலநிலை செயல் திட்ட கொடுப்பனவு தொகையாக இவ்வாறு பணம் வழங்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறிப்பாக காபன் வெளியீட்டை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
ஆண்டு தோறும் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு தடவையும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
ஒன்றாரியோ, அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான் மற்றும் மனிடோபா மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கொடுப்பனவு ஒன்றாரியோ மக்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்றது.
குடும்ப நிலையின் அடிப்படையில் கொடுப்பனவு தொகை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தனி நபர்களுக்கு 373 டொலர்களும், வாழ்க்கைத் துணைக்கு 186 டொலர்களும், 19 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கு 93 டொலர்களும், தனிப் பெற்றோரின் முதல் பிள்ளைக்கு 186 டொலர்களும் வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பணம் கிடைக்காவிட்டால் அது குறித்து அறிவிக்குமாறு ஒன்றாரியோ அரசாங்கம் கோரியுள்ளது.