உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்கள்: வெளியான தகவல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக ஐநா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் உத்தரவைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியதாகவும், 100,000 க்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அண்டை நாடுகளுக்கு புகலிடம் வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவிகள் தயார் நிலையில் உள்ளதாக போலந்து சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
120 மருத்துவமனைகள் ஆயிரக்கணக்கான நோயாளிகளைப் பெறுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.