டிரம்பிற்கு கவலையை ஏற்படுத்திய மக்களின் கருத்துக்கணிப்பு!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை குறித்து அமெரிக்க மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
டிரம்ப்(Donald Trump) மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை பெருமளவு மக்கள் விரும்பாததது கருத்து கணிப்பின் மூலம் புலனாகியுள்ளது. டிரம்ப்(Donald Trump) மீண்டும் போட்டியிடுவது மோசமான விடயம் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பத்தில் ஆறு பேர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 34 பேர் டிரம்ப் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டனர். 2024 இல் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்ப் தீர்மானித்துள்ளமை மோசமான விடயம் என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனை விட குடியரசுக்கட்சியின் 28 வீதமானவர்களும் டிரம்ப்(Donald Trump) மீண்டும் போட்டியிடுவதை விரும்பவில்லை என்பதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் மூலம் டிரம்ப்(Donald Trump) மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயல்வது நாட்டிற்கு மோசமான விடயம் என ஜனநாயக கட்சியினர் மாத்திரமல்லாமல் பொதுமக்களும் கருதுவது புலனாகியுள்ளது.
மேலும் புளோரிடா ஆளுநரான ரொன் டி சான்டிஸ் போட்டியிடவேண்டும் என குடியரசுக்கட்சியினர் பெருமளவிற்கு எதிர்பார்ப்பதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.