ஜெர்மனியில் திடீரென தொழில்களை விட்டு வெளியேறும் மக்கள்!
ஜெர்மனியில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போதிலும் அவர்களில் அதிகமானோர் வேலைகளில் அதிருப்தி அடைந்துள்ளதாக McKinsey இன் புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஏறக்குறைய மூன்றில் ஒருவர் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் வேலையை விட்டுவிடலாம் என்று கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட McKinsey என்ற ஆய்வு நிறுவனம் 16.000 க்கும் மேற்பட்ட ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாட்டவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
அதற்கு பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அடுத்த மூன்று முதல் 6 வரை தங்கள் வேலையை விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆய்வு ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல, இது ஐரோப்பாவில் குறிப்பாக அதிக விகிதமாகும், மக்கள் நீண்ட காலமாக தங்கள் வேலைகளில் இருக்க முனையும் நிலையில் ஜெர்மனி மக்களின் இந்த தீர்மானம் வியப்பாக உள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனியில், ஆயிர கணக்கான மக்கள் நேர்காணல் செய்யப்பட்டனர். அவர்களில், சுமார் 36 சதவீதம் பேர் தங்கள் மேலாளர்கள் மீது அதிருப்தி இருப்பதாகவும், 34 சதவீதம் பேர் தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
இதன்போது ஆச்சரியப்படத்தக்க வகையில், நியாயமான சம்பளம், நம்பகமான மற்றும் பயனுள்ள சக பணியாளர்கள் மற்றும் பணியிடத்தில் நெகிழ்வுத்தன்மை இருந்தால், அவர்கள் ஒரு வேலையில் தொடர்ந்து இருக்க விரும்புவதாக மக்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பா முழுவதும் இவ்வாறான ஒரு விடயமே நிலையானதாக இருந்ததென ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.