மருத்துவமனையில் மத வழிபாடு... கனேடிய செவிலியருக்கு ஏற்பட்ட நிலை
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நோயாளியிடம் உரிய அனுமதி பெறாமல் மத வழிபாட்டை முன்னெடுத்த செவிலியர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் தண்டித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் குறித்த சம்பவம் 2021 ஜூன் மாதம் நடந்துள்ளது. பூர்வகுடி நோயாளி ஒருவரிடம், அவரது பாரம்பரியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல், Christopher Villaflor என்ற செவிலியர் மத வழிபாடு முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது விசாரணைக்கு பின்னர் செவிலியர் Christopher Villaflor என்பவருக்கு நான்கு மாதங்கள் அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ஓராண்டு காலம் அவர் செவிலியராக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், செவிலியர் Christopher Villaflor எந்தவகையான மத வழிபாட்டை முன்னெடுத்தார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், மேற்கு கெலோனாவில் ஒரு முன்னாள் செவிலியர் தடுப்பூசி தரவுகள் பகிர்ந்தது தொடர்பில் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.