பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிரந்தர வீடு
வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டு கிராமத்தில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வரும் பெண்தலமைத்துவ குடும்பங்களுக்கான நிரந்தர வீடு அமைத்து கொடுக்கும் செயலினை பிரித்தானிய - ஓம் சரவணபாபா அறக்கட்டளையினர் - முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் , முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரதேசத்தில் நிரந்தரமான வீடு ஒன்று இல்லாததால் பல்வேறு சொல்லணாத் துன்பங்களை அனுபவித்தது வந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கான வீடமைப்பு திட்டத்துக்கான அத்திவாரம் தைப் பொங்கல் நாளான தை முதல் நாள் அத்திவாரம் இடப்பட்ட்து.
14.01.2021 அன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், முத்தையன்கட்டு கிராம சேவையாளர், கிராமஅபிவிருத்திச் சங்கத்தினர் , மாதர்சங்க உறுப்பினர் , விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் , வானவில் ஊற்றுக்கழகத்தை சேர்ந்ததோர், கமக்கார அமைப்பின் செயலாளர், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர் , பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் ஆகியோரும் அந்த கிராமத்தவர்களும் கலந்து கொண்டனர் .




