மன்னர் சார்லஸின் ரகசிய மகன் என கூறும் நபர் வெளியிட்ட புதிய சர்ச்சை!
பிரித்தானிய மன்னர் சார்லஸ் (King Charles III)- கமிலா(Camila) தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வரும் சைமன் டொரண்டே டே(Simon Torrent Day) இளவரசர் ஹரி (Prince Harry)- மேகனை(Meghan) சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர் சைமன் டொரண்டே டே (56). இவர் சார்லஸ் (King Charles III) - கமிலா(Camila) தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார்.
அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் (King Charles III)- கமிலாவிற்கு(Camila) ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.
அவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், நான் ஹரியை (Prince Harry) ரகசியமாக சந்திக்கவுள்ளேன். ஹாரிக்கும் (Prince Harry)எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன், நாங்கள் இருவரும் நேருக்கு நேர் பேசுவது அறிவூட்டுவதாக இருக்கும். நாங்கள் இருவருமே அரச குடும்பத்தின் கருப்பு ஆடுகள் அனா அவர் கூறியுள்ளார்.
ஹரி (Prince Harry) மற்றும் மேகனுடன்(Meghan) உறவை உருவாக்கி கொள்ள நானும் என் மனைவியும் விரும்புகிறோம். அரச குடும்ப உறுப்பினர்களாக இருந்தும் அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள்.
சார்லஸ் (King Charles III) அவர்களை நடத்தும் விதம் அருவருப்பானது, நான் ஹரி (Prince Harry) - மேகனை சந்திக்கும் போது செய்யும் முதல் விஷயம் அவர்களுக்கு பெரிய அரவணைப்பை கொடுப்பது தான்! ஏனெனில் அது அவர்களுக்கு தேவை என நினைக்கிறேன்.
என் மனைவி எல்வியானாவுக்கும் மேகனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும் என கருதுகிறேன். மக்கள் மேகனிடம் (Meghan) இனவெறியை காட்டுகின்றனர், அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதை சுதந்திரமாகச் வெளிப்படுத்த வேண்டும்.
ஹரிக்கு (Prince Harry) கருப்பின பெண் மனைவியாக இருக்கிறார், என் மனைவியும் கருப்பின பெண் தான் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.