அமெரிக்காவில் பன்றி சிறுநீரகம் பெருத்தப்பட்ட நபருக்கு 2 மாதங்களில் நேர்ந்த சோகம்!
அமெரிக்காவில் வேமவுத் நகரைச் சேர்ந்தவர் 62 வயதான ரிச்சர்டு ஸ்லேமன் என்பவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் மருத்துவரகளால் பொருத்தப்பட்டது.
பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 16-ம் திகதி வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. உடல்நிலை படிப்படியாக தேறிய நிலையில், கடந்த மாதம் (ஏப்ரல் வீடு திரும்பினர்.
இவ்வாறான நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி மகிழ்ச்சியாக பொழுதை கழித்த ரிச்சர்டு ஸ்லேமன் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அவரது மரணம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை கூறியுள்ளது.